கிளிப் சிகிச்சை/Braces in Tamil

Dental braces in madurai

நம் பற்களை சீரமைக்கின்ற சிகிச்சை தான் இந்த கிளிப் சிகிச்சை. இதற்கு ஆங்கிலத்தில் braces or orthodontic treatment என்று சொல்லலாம்.


கிளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து அந்த பற்களை சரியான அமைப்புக்கு கொண்டு வர முடியும்.


இந்த கிளிப் சிகிச்சை மூலம் எத்து ப் பற்கள், கோணலாக முளைத்த பற்கள், பற்களுக்கு நடுவில் இடைவெளி என்று எதுவாக இருந்தாலும் சரி செய்யலாம்

கிளிப் சிகிச்சை க் காண சரியான வயது?

நம் சமூகத்தில் கிளிப் சிகிச்சை க் காண வயது 13 வயதுக்கு மேல் என்று தவறாக சித்தரிக்க ப் பட்டுள்ளது.
பற்களில் மட்டும் தான் பிரச்சினை என்றால் அதை 13 வயதுக்கு மேல் சரி செய்யலாம். 

ஆனால் பற்கள் நன்றாக இருந்து தாடை எலும்பில் பிரச்சினை இருக்கலாம்.
மேல் தாடை பெரிதாகவோ அல்லது சிரிதாகவோ இருக்கலாம். அதே போல் கீழ் தாடையும் பெரிதாகவோ அல்லது சிரிதாகவோ இருக்கலாம்.

 இது இல்லாமல், குறுகிய தாடைகளை விரிவடைய செய்து பற்களை சீரமைக்க வாய்ப்பு உள்ளது. இது அனைத்தும் 6வயது முதல் 9 வயதுக்குள் சிகிச்சை செய்ய வேண்டும். 

இப்படி இது போன்ற பிரச்சனைகள் வளரும் பருவத்தில் சரி செய்ய வில்லை என்றால், இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்து சரி செய்ய முடியும்.

தேவைப்படும் xray ஸ்கேன் என்ன?

இந்த பிரச்சினை களை கண்டு பிடிக்க opg மற்றும் lateral ceph எனப்படும் இரண்டு xray தேவைப்படும்.

wisdom teeth imapction

கிளிப் வகைகள் என்ன?
Braces Types in Tamil?

4 வகையான கிளிப் சிகிச்சை உள்ளது.
முதல் வகை-மெட்டல் (metal) கிளிப் வகை.
மெட்டல் கிளிப்கள் பயன்படுத்தி கம்பிகள் மூலம் பற்களை நகர செய்வது.

dental braces in madurai- metal braces

மெட்டல் (metal) கிளிப் வகை.

இரண்டாவது வகை-செராமிக்(ceramic)கிளிப் வகை.
இந்த கிளிப் வகை பல் நிறத்தில் இருக்கும். ஆதலால், கிளிப் அணிந்திருப்பது வெளியே பெரிதாக தெரியாது.

Dental Braces in madurai- ceramic braces

செராமிக்(ceramic)கிளிப் வகை.

மூன்றாவது வகை- செல்ப் லிகேட்டிங்(self ligating) கிளிப்.
இதில் கிளிப்பும் கம்பியும் சேரும் விதம் எலாஸ்டிக்ஸ்(elastics) மூலம் இல்லாமல் கிளிப்பில் உள்ள லாட்ச்(latch) முறையில் சேரும். இதனால் சிகிச்சை கால அவகாசம் குறையும்.

dental braces in madurai- self ligating

செல்ப் லிகேட்டிங்(self ligating) கிளிப்.

நான்காவது வகை- கிளியேர் அலைநேர்(clear aligner).
இந்த சிகிச்சை முறையில் கண்ணுக்கு தெரியாத பொருள் மூலம் கழற்றி மாட்டக்கூடிய அலைநேர் உருவாக்க ப் படும். இந்த முறையில் மாதா மாதம் வர வேண்டிய அவசியம் இல்லை. விலை உயர்ந்த தாக இருந்தாலும் பெரியவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு இது சிறந்த தாக இருக்கும்.

dental braces in madurai- clear aligners

கிளியேர் அலைநேர்(clear aligner).

கிளிப் சிகிச்சைக்கு வயது வரம்பு என்ன?

பற்களுக்கு தேவையான எலும்பு சுற்றி இருந்தால், கிளிப் சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது.
ஆனால்30-35 வயதை மீறியவர்கள் கிளிப் சிகிச்சை மேற்கொள்ளும் போது நம் சமூகத்தின் பார்வை வேறுபடும். அதனால், 35 வயதுக்கு மேல் உள்ள மக்கள், தங்களுக்கு விருப்பமும் மன உறுதியும் இருந்தால் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கால அவகாசம் என்ன?

ஒவ்வொருவரின் பற்களின் நிலைக்கு ஏற்றார் போல் மாறுபடும். சுமாராக 1-1.5 வருடங்கள் வரை சிகிச்சை தொடரலாம்.

மேலும் விவரங்கள் அறிய, தொடர்பு கொள்ளவும்/வாட்சப்ப்(whatsapp)
9095280903

மகிழ்ச்சி பல் மருத்துவமனை


கிளை I– No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014
நேரம்-9am-6pm

கிளை II– 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001
நேரம்- 5pm-9pm

9095280903

Share This
Call Now Button
WhatsApp WhatsApp us