ஞானப்பல் எடுத்தல்

நமக்கு பொதுவாக 32 பற்கள் இருக்க வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.நீங்கள் உங்களுக்கு எத்தனை பற்கள் உள்ளது என்று எண்ணிப்பார்த்ததுண்டா. நீங்கள் 25 வயது தாண்டியவராக இருந்து, எந்த காரணத்திற்கும் உங்கள் பற்களை எடுக்காமல், இருப்பினும் 32 பற்கள் இல்லை என்றால், உங்கள் பல் இம்பாக்டீட்(impacted) ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
அந்த இம்பாக்டீட் பல் ஞானப்பல் ஆக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஞானப்பல் (எ) wisdom tooth

ஞானப்பற்களை மூன்றாவது கடவாய்ப்பற்கள் என்று சொல்லலாம். இது பெரும்பாலும் 18-25 வயதுக்குள் முளைக்கும். அப்படி ஞானம் வர வேண்டிய வயதில் முளைப்பதால் அதை ஞானப்பல் என்று அழைக்கின்றோம்.

wisdom teeth impaction MADURAI

இம்பாக்க்ஷன் (அ) impaction

ஒரு பல் முளைக்க வேண்டிய நேரத்தில் முளைக்காமல் இருந்தாலோ, அல்லது முளைக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலோ அந்த பல் இம்பாக்டீட் (Impacted)என்று சொல்லப்படும். பெரும்பாலும் ஞானப்பல் தான் இம்பாக்டீட் ஆக இருக்கும்.

wisdom teeth imapction

பிரச்னைகள் என்ன?

ஞானப்பல் பாதியாக முளைத்திருக்கலாம் அல்லது முழுமையாக எழும்புக்குள் புதைந்து இருக்கும்.பாதியாக முளைத்த ஞானப்பல், ஈறுகளில் உணவு பொருட்கள் சிக்கி ஈறு வீக்கத்தை உண்டாக்கும். இதனால் வாய் திறப்பதும் கடினமாக இருக்கும்.அருகில் இருக்கும் பல்லின் மீது சாய்ந்து இருந்தால், இரண்டு பற்களிலும் சொத்தை உண்டாக வாய்ப்பு உள்ளது.

wisdom teeth impaction

Xrays அவசியமா???

கண்டிப்பாக OPG எனப்படும் ஒரு xray தேவைப்படும்..மேலும் சந்தேகம் இருந்தால், CBCT எனப்படும் ஸ்கேன் தேவைப்படும்.

சிகிச்சை என்ன?

பாதி ஈறு மூடிய பல்லை ஓரு சிறிய சிகிச்சை(operculectomy) மூலம் சரி செய்யலாம்.
எலும்பு மூடியிருக்கும் பல் வழியோ அல்லது அடுத்த பல்லை பாதிப்பு அடையசெய்தால், அந்த பல்லை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

ஞானப்பல் எடுக்க ஆகும் செலவு

ஞானப்பல்லை சிறு அறுவை சிகிச்சை மூலம் எடுக்க ஆகும் செலவு ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனையிலும் மாறுபடும்.. 

இது சுமார் Rs 3000- Rs 6000.

In US- 225$-600$

செயற்கை பல் தேவையா??

ஞானப்பல்லுக்கு செயற்கை பல் பொறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

For more enquiries,CONTACT US

Unit I- No 1, Old Natham road( P&T nagar road),

near Balamandiram school,

Madurai, Tamilnadu, India- 625014.

Timings- 9am-9pm.

Unit II- 120, Vakkil new street,(opp IDBI bank),

Madurai, Tamilnadu, India-625001.

Timings- 5pm-9pm

Contact – +91 9095280903 , +91 9940756655

Share This
Call Now Button
WhatsApp WhatsApp us