வினீர் சிகிச்சை/Veneers in Tamil

dental veneer - madurai

வினீர் என்றால் என்ன? வினீர் எப்போது தேவைப்படும்?

முன் பற்களில் தங்காத பல் அடைப்பு.
பற்களில் பிளீச்சிங் முறையிலும் சரிசெய்ய முடியாத பல் கறைகள்.

பற்களுக்கு நடுவில் சிறு இடைவெளிகள்.
இந்த பிரச்சினை களுக்கு பல் தொப்பி போன்ற சிகிச்சைகள் தேவையில்லை. டெண்டல் வினீர் சிகிச்சை இதற்கு சரியான நிரந்தரமான தீர்வு

veneers

டெண்டல் வினீர் என்றால் என்ன?

வினீர் என்பது ஒரு செயற்கையான ஓடு போன்ற ஒரு பல் போர்வை என்று சொல்லலாம். 

இது பற்களின் முன் பகுதியில் ஓட்டி விடப்படும்

டெண்டல் வினீர் Vs டெண்டல் கிரௌன்(பல் தொப்பி)-எது சிறந்தது

ஒரு பல் தொப்பி செய்வதற்கு பல்லின் அனைத்து பக்கங்களிலும் 1.5-2mm அளவு பல்லை குறைக்க வேண்டும். 

ஆனால் வினீர் சிகிச்சைக்கு பல்லின் முன் பகுதியை மட்டும் 0.5mm குறைத்தால் போதும்.

 பற்களின் அழகிற்கு மட்டும் தேவை பட்டால் வினீர் போதுமானது.ஆனால் பல்லின் வலிமையை அதிகமாக்க பல் தொப்பி சிறந்தது.

dental veneers - Madurai

வினீர் சிகிச்சை வலிக்குமா?

0.5mm மட்டும் பல்லின் முன் மட்டும் குறைப்பதால் வலி ஏதும் இல்லை.

டெண்டல் வினீர் Vs பல் கிளிப் சிகிச்சை

பற்களுக்கு நடுவில் சிறு இடைவெளிகளை கிளிப் சிகிச்சை மூலம் சரி செய்ய 1-1.5 வருடங்கள் ஆகலாம். 

ஆனால் வினீர் சிகிச்சை மூலம் 3 நாட்களில் சரி செய்ய முடியும்.
வினீர் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியாத போது கிளிப் சிகிச்சை தான் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய, தொடர்பு கொள்ளவும்/வாட்சப்ப்(whatsapp) 9095280903

மகிழ்ச்சி பல் மருத்துவமனை
கிளை I- No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014
நேரம்-9am-6pm

கிளை II- 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001
நேரம்- 5pm-9pm

9095280903

Share This
Call Now Button
WhatsApp WhatsApp us