Latest News

Distinctively re-engineer revolutionary meta-services, change management and premium architectures. Intrinsically incubate intuitive opportunities and real-time potentialities.
bt_bb_section_bottom_section_coverage_image
April 1, 2024

வலைப்பதிவின் சுருக்கம் முன்னுரை பல் கிளிப் சிகிச்சையின் முக்கியத்துவம் பற்கள் கிளிப் சிகிச்சையின் சுருக்கமான கண்ணோட்டம் பற்கள் கிளிப் சிகிச்சையின் வகைகள் பாரம்பரிய பிரேஸ்கள் தெளிவான சீரமைப்பிகள் லிங்குவல் பிரேஸ்கள் செராமிக் பிரேஸ்கள் டாமன் பிரேஸ்கள் பல் கிளிப் சிகிச்சையின் நன்மைகள் மேம்படுத்தப்பட்ட பல் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்ட அழகியல் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் பல் பிரச்சினைகளின் ஆபத்து குறைக்கப்பட்டது பல் கிளிப் சிகிச்சையின் செயல்முறை ஆரம்ப ஆலோசனை சிகிச்சை திட்டமிடல் பிரேஸ்களைப் பொருத்துதல் வழக்கமான சோதனைகள் மற்றும் சரிசெய்தல்...

March 24, 2021
Teeth Aligners in Tamil/ Invisalign cost madurai

உங்கள் கிளியர் அலைநியர்(clear aligner)பயணத்தை துவங்குங்கள்- Click here கிளியர் அலைநியர்(clear aligner)  சிகிச்சை தான் இப்போது மிகவும் தேவை படும் சிகிச்சை ஆகும். சாதாரண கிளிப் சிகிச்சை அதிக நேரமெடுக்கிறது மற்றும் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்த clear aligner சிகிச்சை குறைந்த நேரம் மற்றும் யூகிக்கக்கூடிய சிகிச்சை பலன்களை தரக்கூடியவை.இந்த சிகிச்சை முறை பற்றி தெரிந்து கொள்ளலாம். Clear Aligner explanation in English- click here இந்த சிகிச்சை...

February 8, 2021
கிளிப் சிகிச்சை/ Braces in Tamil

நம் பற்களை சீரமைக்கின்ற சிகிச்சை தான் இந்த கிளிப் சிகிச்சை. இதற்கு ஆங்கிலத்தில் braces or orthodontic treatment என்று சொல்லலாம். கிளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து அந்த பற்களை சரியான அமைப்புக்கு கொண்டு வர முடியும். இந்த கிளிப் சிகிச்சை மூலம் எத்து ப் பற்கள், கோணலாக முளைத்த பற்கள், பற்களுக்கு நடுவில் இடைவெளி என்று எதுவாக இருந்தாலும் சரி செய்யலாம். கிளிப்...

நம் பற்களை சீரமைக்கின்ற சிகிச்சை தான் இந்த கிளிப் சிகிச்சை.

இதற்கு ஆங்கிலத்தில் braces or orthodontic treatment என்று சொல்லலாம்.

கிளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து அந்த பற்களை சரியான அமைப்புக்கு கொண்டு வர முடியும்.

இந்த கிளிப் சிகிச்சை மூலம் எத்து ப் பற்கள், கோணலாக முளைத்த பற்கள், பற்களுக்கு நடுவில் இடைவெளி என்று எதுவாக இருந்தாலும் சரி செய்யலாம்.

கிளிப் சிகிச்சை க் காண சரியான வயது?

நம் சமூகத்தில் கிளிப் சிகிச்சை க் காண வயது 13 வயதுக்கு மேல் என்று தவறாக சித்தரிக்க ப் பட்டுள்ளது.
பற்களில் மட்டும் தான் பிரச்சினை என்றால் அதை 13 வயதுக்கு மேல் சரி செய்யலாம்.

ஆனால் பற்கள் நன்றாக இருந்து தாடை எலும்பில் பிரச்சினை இருக்கலாம்.
மேல் தாடை பெரிதாகவோ அல்லது சிரிதாகவோ இருக்கலாம்.

அதே போல் கீழ் தாடையும் பெரிதாகவோ அல்லது சிரிதாகவோ இருக்கலாம்.

இது இல்லாமல், குறுகிய தாடைகளை விரிவடைய செய்து பற்களை சீரமைக்க வாய்ப்பு உள்ளது.

இது அனைத்தும் 6வயது முதல் 9 வயதுக்குள் சிகிச்சை செய்ய வேண்டும்.

இப்படி இது போன்ற பிரச்சனைகள் வளரும் பருவத்தில் சரி செய்ய வில்லை என்றால், இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்து சரி செய்ய முடியும்.

தேவைப்படும் xray ஸ்கேன் என்ன?

இந்த பிரச்சினை களை கண்டு பிடிக்க opg மற்றும் lateral ceph எனப்படும் இரண்டு xray தேவைப்படும்.

 

கிளிப் வகைகள் என்ன?
Braces Types in Tamil?

4 வகையான கிளிப் சிகிச்சை உள்ளது.
முதல் வகை-மெட்டல் (metal) கிளிப் வகை.
மெட்டல் கிளிப்கள் பயன்படுத்தி கம்பிகள் மூலம் பற்களை நகர செய்வது.

மெட்டல் (metal) கிளிப் வகை.

இரண்டாவது வகை-செராமிக்(ceramic)கிளிப் வகை.
இந்த கிளிப் வகை பல் நிறத்தில் இருக்கும். ஆதலால், கிளிப் அணிந்திருப்பது வெளியே பெரிதாக தெரியாது.

 

செராமிக்(ceramic)கிளிப் வகை.

மூன்றாவது வகை- செல்ப் லிகேட்டிங்(self ligating) கிளிப்.
இதில் கிளிப்பும் கம்பியும் சேரும் விதம் எலாஸ்டிக்ஸ்(elastics) மூலம் இல்லாமல் கிளிப்பில் உள்ள லாட்ச்(latch) முறையில் சேரும். இதனால் சிகிச்சை கால அவகாசம் குறையும்.

 

செல்ப் லிகேட்டிங்(self ligating) கிளிப்.

நான்காவது வகை- கிளியேர் அலைநேர்(clear aligner).
இந்த சிகிச்சை முறையில் கண்ணுக்கு தெரியாத பொருள் மூலம் கழற்றி மாட்டக்கூடிய அலைநேர் உருவாக்க ப் படும். இந்த முறையில் மாதா மாதம் வர வேண்டிய அவசியம் இல்லை. விலை உயர்ந்த தாக இருந்தாலும் பெரியவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு இது சிறந்த தாக இருக்கும்.

கிளியேர் அலைநேர்(clear aligner).

 

கிளிப் சிகிச்சைக்கு வயது வரம்பு என்ன?

பற்களுக்கு தேவையான எலும்பு சுற்றி இருந்தால், கிளிப் சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது.
ஆனால்30-35 வயதை மீறியவர்கள் கிளிப் சிகிச்சை மேற்கொள்ளும் போது நம் சமூகத்தின் பார்வை வேறுபடும். அதனால், 35 வயதுக்கு மேல் உள்ள மக்கள், தங்களுக்கு விருப்பமும் மன உறுதியும் இருந்தால் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
 

கால அவகாசம் என்ன?

ஒவ்வொருவரின் பற்களின் நிலைக்கு ஏற்றார் போல் மாறுபடும். சுமாராக 1-1.5 வருடங்கள் வரை சிகிச்சை தொடரலாம்.

 
 
End of Blog

The Best Travel Packages

Use CODE - 'MAGIZHCHI' for best deals and Discounts

loader
Start chat
1
Hello
Welcome to MagizhchiDental, How can we help you?