நமக்கு பொதுவாக 32 பற்கள் இருக்க வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.நீங்கள் உங்களுக்கு எத்தனை பற்கள் உள்ளது என்று எண்ணிப்பார்த்ததுண்டா. நீங்கள் 25 வயது தாண்டியவராக இருந்து, எந்த காரணத்திற்கும் உங்கள் பற்களை எடுக்காமல், இருப்பினும் 32 பற்கள் இல்லை என்றால், உங்கள் பல் இம்பாக்டீட்(impacted) ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
அந்த இம்பாக்டீட் பல் ஞானப்பல் ஆக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஞானப்பல் (எ) wisdom tooth
ஞானப்பற்களை மூன்றாவது கடவாய்ப்பற்கள் என்று சொல்லலாம். இது பெரும்பாலும் 18-25 வயதுக்குள் முளைக்கும். அப்படி ஞானம் வர வேண்டிய வயதில் முளைப்பதால் அதை ஞானப்பல் என்று அழைக்கின்றோம்.
இம்பாக்க்ஷன்(அ) impaction
ஒரு பல் முளைக்க வேண்டிய நேரத்தில் முளைக்காமல் இருந்தாலோ, அல்லது முளைக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலோ அந்த பல் இம்பாக்டீட் (Impacted)என்று சொல்லப்படும். பெரும்பாலும் ஞானப்பல் தான் இம்பாக்டீட் ஆக இருக்கும்.